ஆக்ரோஷமான புதிய தோற்றத்தில் ராஷ்மிகா: 'மைசா' படத்தின் 'ஓ மைசா ரே' முதல் பாடல் வெளியீடு!

ஆக்ரோஷமான புதிய தோற்றத்தில் ராஷ்மிகா: 'மைசா' படத்தின் 'ஓ மைசா ரே' முதல் பாடல் வெளியீடு!

நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மைசா' திரைப்படத்தின் முதல் சிங்கிளான 'ஓ மைசா ரே' பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் வெளியீடு குறித்த தகவலைப் படக்குழு எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளது. இப்பாடலில் பழங்குடியினப் பெண்ணாக, கையில் வேல் ஏந்தி முற்றிலும் மாறுபட்ட தீவிரமான ஆக்ரோஷப் பாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். பிரம்மாண்டமான விஷுவல்கள், ரவீந்திர புல்லேயின் இயக்கம் மற்றும் பிருந்தா மாஸ்டரின் அனல் பறக்கும் நடன அமைப்பு ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் வரும் நவம்பர் 27, 2026 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. பான்-இந்தியா அளவில் உருவாகும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்