ரஷ்மிகா மந்தனாவின் 'மைசா': வட இந்தியா மற்றும் நேபாள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஏஏ பிலிம்ஸ்!
ரஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'மைசா' (MYSAA), வரும் நவம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வட இந்தியா மற்றும் நேபாள திரையரங்கு விநியோக உரிமையை முன்னணி நிறுவனமான ஏஏ பிலிம்ஸ் (AA Films India) கைப்பற்றியுள்ளது. ரவீந்திர புல்லே இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் பல மொழிகளில் பான்-இந்தியா அளவில் தயாராகி வருகிறது. பாகுபலி, கே.ஜி.எஃப் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை வட இந்தியாவில் பிரம்மாண்டமாக விநியோகம் செய்த அனில் ததானியின் ஏஏ பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவது பாலிவுட் வர்த்தக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரஷ்மிகா மந்தனாவின் ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான பரிமாணங்களை வெளிப்படுத்தும் இந்த திரைப்படம், இந்தி பேசும் மாநிலங்களிலும் பெரிய அளவிலான திரைகளில் வெளியாகவுள்ளது. உலகளாவிய ரீதியில் வரும் நவம்பர் 27 ஆம் தேதி மைசா திரைக்கு வரத் தயாராகி வருகிறது.
· Ursvamsishekar