ராஷ்மிகா மந்தனாவின் 'மைசா': உள்ளத்தைத் தொடும் 'முத்தாரமே' பாடல் வெளியானது!

ராஷ்மிகா மந்தனாவின் 'மைசா': உள்ளத்தைத் தொடும் 'முத்தாரமே' பாடல் வெளியானது!

நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'மைசா' (MYSAA) திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'முத்தாரமே' தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வாழ்க்கையின் மிக உன்னதமான தாய் மற்றும் குழந்தை பாசப் பிணைப்பைக் கொண்டாடும் அழகிய மெலடியாக இப்பாடல் உருவாகியுள்ளது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜேக்ஸ் பிஜோய் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு வி.ஆர் இதயத்தைத் தொடும் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடகர் அனிருத் சுஸ்வரம் தனது மென்மையான குரலில் இப்பாடலை வசீகரிக்கும் விதமாகப் பாடியுள்ளார். இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்தை அன்ஃபார்முலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஷ்மிகாவின் நெகிழ்ச்சியான நடிப்பும் பாடலின் காட்சிகளும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. டி-சீரிஸ் யூடியூப் தளத்தில் வெளியாகி வைரலாகி வரும் 'மைசா' திரைப்படம், வரும் நவம்பர் 27 அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

· Prosathish

பழைய செய்திகள்