ராஷ்மிகா மந்தனாவின் மைசா: ஜேக்ஸ் பிஜாய் இசையில் இரண்டாவது பாடல் நாளை மாலை ரிலீஸ்!

ராஷ்மிகா மந்தனாவின் மைசா: ஜேக்ஸ் பிஜாய் இசையில் இரண்டாவது பாடல் நாளை மாலை ரிலீஸ்!

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரம்மாண்ட பான்-இந்திய திரைப்படம் மைசா (MYSAA). ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்பாடல் தமிழில் முத்தாரமே (Muthaaramey) என்றும், தெலுங்கில் ஏநாட்டி வரமோ நுவ்வு என்றும் வெளியிடப்பட உள்ளது. பழங்குடியினப் பெண்ணாக ராஷ்மிகா மந்தனா இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படம், உணர்வுப்பூர்வமான அதிரடி த்ரில்லராகப் பின்னப்பட்டுள்ளது. டி-சீரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பணிகளும் முழு வீச்சில் நிறைவடைந்துள்ள நிலையில், மைசா திரைப்படம் வரும் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்