ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’: தமிழ்நாடு திரையரங்கு உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
நேஷனல் கிரஷ் ரஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘மைசா’. இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை பிரபல திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளது என்ற அறிவிப்பு எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. ரவீந்திர புல்லே இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘மைசா’ திரைப்படத்தை அன்ஃபார்முலா பிலிம்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பெண்களை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் ரஷ்மிகாவின் அழுத்தமான நடிப்பு இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தென் மாநிலங்களில் இப்படத்தை பெரிய அளவில் வெளியிட திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் 2026 நவம்பர் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதால், விரைவில் டீசர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் உள்ளிட்ட அடுத்தடுத்த கொண்டாட்ட அறிவிப்புகள் வரவிருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
· Prosathish