மைசா கதாபாத்திரத்தில் மிரட்டிய ராஷ்மிகா மந்தனா: ஓ மைசா ரே பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பு!

மைசா கதாபாத்திரத்தில் மிரட்டிய ராஷ்மிகா மந்தனா: ஓ மைசா ரே பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் 'ஓ மைசா ரே' என்ற வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. மைசா என்ற தீவிரமான கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவின் நடனம், உணர்ச்சிகரமான முகபாவங்கள் மற்றும் அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு சுத்தால அசோக் தேஜா பாடல் வரிகளை எழுதியுள்ளார். சிந்துஜா ஸ்ரீனிவாசன் தனது வசீகர குரலால் பாடலைப் பாட, பிரபல நடன இயக்குநர் பிருந்தா கோபால் நேர்த்தியான நடன அசைவுகளை அமைத்துள்ளார். ராஷ்மிகா இதுவரை ஏற்றிராத ஒரு வித்தியாசமான நடிப்பை இந்தப் பாடலில் வெளிப்படுத்தியுள்ளார் எனப் பாராட்டுகள் குவிகின்றன. இத்திரைப்படம் வரும் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இந்த பாடல் கொடுத்த உற்சாகம் ராஷ்மிகா ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்