நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீசுக்குப் பிறகு 29 படத்திற்கு குவிந்த அன்பு: உருகிப் பேசிய ரத்னகுமார்!
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் விது மற்றும் ப்ரீத்தி நடிப்பில் வெளியான '29' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தனது நெகிழ்ச்சியான நன்றியை எக்ஸ் தளத்தில் விரிவான பதிவாக வெளியிட்டுள்ளார் ரத்னகுமார். திரையரங்குகளில் படத்தை தவறவிட்டதற்காக பலரும் மன்னிப்புக் கோரியும், படத்தின் ஆழமான உணர்வுபூர்வமான காட்சிகள் மனதை ஆற்றியதாகக் கூறியும் உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக் கடிதங்கள் அனுப்பி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஓவியங்கள் ஆகியவற்றைக் கண்டு கண் கலங்கிப் போனதாகத் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள அவர் விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு அடுத்த படைப்புகளில் மேலும் சிறப்பாகச் செயல்படுவேன் எனக் கூறியுள்ளார். ஷான் ரோல்டனின் இதமான இசையில் உருவான இந்த உணர்வுப்பூர்வமான திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து நல்ல பார்வைகளைப் பெற்று சினிமா ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.
· Mrrathna