விருது வென்ற ஹோலி வாட்டர் குறும்படத்தைப் பகிர்ந்த இயக்குநர் ரத்ன குமார்: படக்குழுவினருக்கு பாராட்டு
மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநரும் லியோ, மாஸ்டர் படங்களின் இணை எழுத்தாளருமான இயக்குநர் ரத்ன குமார், விருது வென்ற குறும்படமான 'ஹோலி வாட்டர்' (Holy Water) வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ரமேஷ் இயக்கியுள்ள இந்த குறும்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்து சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. எப்போதும் புதுமையான யோசனைகளுடன் செயல்படும் ரமேஷ் விரைவில் இயக்குநராக அறிமுகமாகும் முதல் முழுநீள திரைப்படத்திற்கும் ரத்ன குமார் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார். நடிகர் கலையரசன், ஒளிப்பதிவாளர் கோபி, இசையமைப்பாளர் தீபன் உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ள இந்த ஹோலி வாட்டர் குறும்படம் யூடியூப் தளத்தில் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
· Mrrathna