ரவி பஸ்ரூரின் மிரட்டலான பின்னணி இசையுடன் கல்ட்: அக்டோபர் 30-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!

ரவி பஸ்ரூரின் மிரட்டலான பின்னணி இசையுடன் கல்ட்: அக்டோபர் 30-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!

கேஜிஎப் புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் அனல் பறக்கும் பின்னணி இசையுடன் விஷ்வாக் சென் இயக்கி நடித்துள்ள கல்ட் திரைப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் பின்னணி இசை ரசிகர்களுக்கு ஒரு பிரத்யேக அனுபவத்தைத் தரும் என படக்குழு தெரிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக ஸ்லாஷர் வகை திரைப்படமாக கல்ட் அடையாளம் காணப்படுகிறது. விஷ்வாக் சென்னின் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் ரவி பஸ்ரூரின் நரம்புகளை முறுக்கேற்றும் பின்னணி இசை ஆகியவை திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் கல்ட் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டு நல்ல வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்