50 நாட்களைக் கடந்த ரவி தேஜாவின் 'இருமுடி': திரையரங்கிலும் நெட்பிளிக்சிலும் மாபெரும் சாதனை!

50 நாட்களைக் கடந்த ரவி தேஜாவின் 'இருமுடி': திரையரங்கிலும் நெட்பிளிக்சிலும் மாபெரும் சாதனை!

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் வெளியான அதிரடி பொழுதுபோக்கு திரைப்படமான 'இருமுடி', திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளன. திரையரங்குகளில் அசுரத்தனமான வசூல் வேட்டையை நிகழ்த்தியதைத் தொடர்ந்து, சர்வதேச ஓடிடி தளத்திலும் இப்படம் பட்டையைக் கிளப்பி புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. குறிப்பாக பிரபல நெட்பிளிகஸ் ஓடிடி தளத்தில் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய திரைப்படங்கள் தரவரிசைப் பட்டியலில் 'இருமுடி' தொடர்ந்து முதல் வரிசையில் ட்ரெண்டாகி வருகிறது. ரவி தேஜாவின் ஆற்றல் நிறைந்த திரை இருப்பு, அனல் பறக்கும் வசனங்கள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உலகெங்கும் உள்ள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. வெளியாகி 50 நாட்கள் கடந்த பின்னரும் கூட பல முக்கிய திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறையாமல் இருப்பது இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை உணர்த்துகிறது. திரையரங்குகளில் மட்டுமின்றி டிஜிட்டல் தளத்திலும் புதிய வசூல் சாதனைகளைப் படைத்து வரும் இருமுடி படத்தின் இந்த இரட்டை வெற்றியை படக்குழுவினரும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்