ரவி தேஜா, விவேக் ஆத்ரேயா கூட்டணியின் துலாபாரம் படப்பிடிப்பு இனிதே தொடக்கம்!
மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இணையும் புதிய படத்திற்கு துலாபாரம் எனப் பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. முதல் நாள் படப்பிடிப்பு குறித்த தகவலை படக்குழுவினர் உற்சாகமாகப் பகிர்ந்துள்ளனர். முன்னதாக புரோச்சேவரெவருரா, அந்தே சுந்தரானிகி மற்றும் சரிபோதா சனிவாரம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா, முதன்முறையாக ரவி தேஜாவுடன் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. ரவி தேஜாவின் எனர்ஜிக்கு ஏற்றபடி ஒரு சுவாரசியமான திரைக்கதையோடு விவேக் ஆத்ரேயா களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் நாள் படப்பிடிப்பைத் தொடர்ந்து தொடர்ந்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
· Ursvamsishekar