பிரம்மாண்ட 'ராமாயணா' படத்தில் லட்சுமணனாக ரவி துபே: புதிய போஸ்டர் வெளியீடு!
இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரம்மாண்ட படைப்பான 'ராமாயணா' திரைப்படத்தில் லட்சுமணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவி துபேயின் சிறப்பு போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ராமர் கதாபாத்திரத்திற்கு உறுதுணையான வீரனாக அவரது தோற்றம் அமைந்துள்ளதாக படக்குழுவினர் விவரித்துள்ளனர். ரன்பீர் கபூர், யாஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த இதிகாசத் திரைப்படம் நவம்பர் 5 அன்று உலகமெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் தம்பி லட்சுமணனாக தோன்றும் ரவி துபேயின் கம்பீரமான அம்பு ஏந்திய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் இத்திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், இந்த போஸ்டர் படம் மீதான ஆவலை மேலும் எகிற வைத்துள்ளது.
· Actor Kayal Devaraj