ரியாலிட்டி படத்தின் பஜ கோவிந்தம் பாடல் வெளியானது: வைக்கம் விஜயலட்சுமியின் வசீகர குரல்

ரியாலிட்டி படத்தின் பஜ கோவிந்தம் பாடல் வெளியானது: வைக்கம் விஜயலட்சுமியின் வசீகர குரல்

பீம்ஸ் சிசிரோலியோ இசையமைப்பில் உருவாகியுள்ள ரியாலிட்டி திரைப்படத்தின் முதல் பாடலான பஜ கோவிந்தம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே இசைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சனாரே எழுதிய வரிகளுக்கு ஆன்மிக நயமும் நவீன இசைக் கோர்ப்பும் கலந்து உயிரூட்டியுள்ளார் பீம்ஸ் சிசிரோலியோ. பாடகியின் தனித்துவமான கம்பீரக் குரல் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பாடலைக் கேட்ட பலரும் இப்பாடலை திரும்பத் திரும்ப கேட்டு வருவதாக எக்ஸ் தளத்தில் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 25 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்