'ரியாலிட்டி' படத்தின் 'பஜ கோவிந்தம்' பாடல் வரவேற்பு: நெகிழ்ச்சியுடன் பேசிய பாடலாசிரியர் சனாரே!

'ரியாலிட்டி' படத்தின் 'பஜ கோவிந்தம்' பாடல் வரவேற்பு: நெகிழ்ச்சியுடன் பேசிய பாடலாசிரியர் சனாரே!

கிரண் அப்பாவரம் நடிப்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தாக வரவிருக்கும் 'ரியாலிட்டி' திரைப்படத்தின் 'பஜ கோவிந்தம்' பாடல் இணையத்தில் தொடர்ந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இப்பாடலை எழுதிய இளம் பாடலாசிரியர் சனாரே தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. எளிமையான வரிகளாலும் தத்துவார்த்தமான பொருட்செறிவாலும் உருவான 'பஜ கோவிந்தம்' பாடல் வெளியான நாள் முதலே இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சமூக வலைதளங்களில் பல லட்சம் ரீல்ஸ்களில் இப்பாடல் தொடர்ந்து ஒலிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்களின் இந்த அன்பும் ஆதரவும் தனக்கு பெருமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக பாடலாசிரியர் சனாரே இந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். குடும்ப உணர்வுகளையும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள 'ரியாலிட்டி' திரைப்படம் வரும் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. படத்தின் பாடல்களுக்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பு, படத்தின் ரிலீஸ் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்