வைக்கம் விஜயலட்சுமி குரலில் வெளியான ரியாலிட்டி படத்தின் பஜ கோவிந்தம் பாடல்!
தெலுங்கு திரையுலகின் பிரபல பிஆர்ஓ வம்சி சேகர் தனது எக்ஸ் தளத்தில் 'ரியாலிட்டி' திரைப்படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பஜ கோவிந்தம்' என்ற பக்தி நயம் கலந்த பாடல் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிரபல பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் தனித்துவமான காந்தக் குரலில் ஒலிக்கும் இப்பாடலுக்கு, பிரபல இசையமைப்பாளர் பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ளார். மனித வாழ்க்கையின் எதார்த்த நிலையை விவரிக்கும் அற்புதமான வரிகளை சனாரே எழுதியுள்ளார். விஜயலட்சுமியின் ஆழமான குரல் வளமும், பீம்ஸின் மண்மணம் மாறாத இசையும் பாடலை பலமுறை கேட்கத் தூண்டுகிறது. வித்தியாசமான கதைகளத்தோடு தயாராகி வரும் 'ரியாலிட்டி' திரைப்படம் கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி வரும் டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த பஜ கோவிந்தம் பாடல் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
· Ursvamsishekar