இன்ஸ்டாகிராமில் 5 நாட்களாக முதலிடத்தில் டிரெண்டாகும் பஜ கோவிந்தம் பாடல்: ரியாலிட்டி பட அப்டேட்!

இன்ஸ்டாகிராமில் 5 நாட்களாக முதலிடத்தில் டிரெண்டாகும் பஜ கோவிந்தம் பாடல்: ரியாலிட்டி பட அப்டேட்!

ரியாலிட்டி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பஜ கோவிந்தம் என்ற மெலடி பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது. பிரபல பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் தனித்துவமான குரலில் ஒலிக்கும் இப்பாடல் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. பீம்ஸ் சிசிரோலியோ இசையமைப்பில் சனாரே எழுதியுள்ள இந்த ஆன்மிக மெலடி பாடல், ஆழ்ந்த வரிகளாலும் இனிமையான இசையமைப்பாலும் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் இதயங்களையும் கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் ஏராளமானோர் இந்தப் பாடலை பின்னணியாக வைத்து வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இணையத்தில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ள ரியாலிட்டி திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்