வைகோம் விஜயலட்சுமியின் குரலில் 'பஜ கோவிந்தம்': 'ரியாலிட்டி' படத்தின் பாடல் வெளியானது!

வைகோம் விஜயலட்சுமியின் குரலில் 'பஜ கோவிந்தம்': 'ரியாலிட்டி' படத்தின் பாடல் வெளியானது!

தேசிய விருது பெற்ற பிரபல பின்னணிப் பாடகி வைகோம் விஜயலட்சுமியின் தனித்துவமான குரலில் உருவாகியுள்ள 'பஜ கோவிந்தம்' என்ற புதிய பக்தி பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. 'ரியாலிட்டி' (Reality) திரைப்படத்தின் முதல் பாடலான இதனை சனாரே எழுதியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ளார். ஆன்மிக நெகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரும் வகையில் உருவாகியுள்ள இப்பாடல் கேட்போரின் கவனத்தை உடனடியாக ஈர்த்து வருகிறது. கவனம் ஈர்க்கும் திரைக்கதையுடன் உருவாகியுள்ள 'ரியாலிட்டி' திரைப்படம் வரும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்