யூடியூபில் கலக்கும் 'ரியாலிட்டி': ஒரே நேரத்தில் ட்ரெண்டிங்கில் இரண்டு பாடல்கள்!
எதிர்வரும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறைப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள 'ரியாலிட்டி' திரைப்படத்தின் இரண்டு பாடல்களான 'ருத்து' (Rutthuu) மற்றும் 'பஜ கோவிந்தம்' (Bhaja Govindam) ஆகியவை ஒரே நேரத்தில் யூடியூப் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்து மாபெரும் சாதனை படைத்து வருகின்றன. இந்த இரட்டை இசை வெற்றியைப் படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். வித்தியாசமான இசைக்கோர்வையில் தனித்துவமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இவ்விரு பாடல்களும் இசை ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளன. பக்தி மற்றும் சமகால இசைக் கலவையில் அமைந்த 'பஜ கோவிந்தம்' பாடலும், மனதை வருடும் மெலடியாக அமைந்துள்ள 'ருத்து' பாடலும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரிலீசுக்கு முன்பே பாடல்கள் மூலமாகவே திரையுலகில் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தியுள்ள 'ரியாலிட்டி' திரைப்படம், வரும் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar