ரியாலிட்டி திரைப்படம் டிசம்பர் 25 ரிலீஸ்: ராதாகிருஷ்ணா என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியீடு

ரியாலிட்டி திரைப்படம் டிசம்பர் 25 ரிலீஸ்: ராதாகிருஷ்ணா என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியீடு

புதிய கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ரியாலிட்டி' (Reality) திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் உலகளாவிய திரையரங்கு விநியோக உரிமையை பிரபல விநியோக நிறுவனமான ராதாகிருஷ்ணா என்டர்டெயின்மென்ட்ஸ் கைப்பற்றியுள்ளது. வித்தியாசமான திரைக்கதையும், சமகால இளைஞர்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கான பாடல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டிரெய்லர் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்