12.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள்: கிறிஸ்மஸ் ரிலீஸுக்கு தயாராகும் 'ரியாலிட்டி' கிளிம்ப்ஸ்!

12.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள்: கிறிஸ்மஸ் ரிலீஸுக்கு தயாராகும் 'ரியாலிட்டி' கிளிம்ப்ஸ்!

தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ரியாலிட்டி' திரைப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ், வெளியான குறுகிய காலத்திலேயே 12.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. படத்தின் புரோமோஷன் குழுவினர் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த முன்னோட்டம், ரசிகர்களை நேரடியாக ஈர்க்கும் விதமான சுவாரசியமான காட்சிகளுடன் அமைந்திருந்ததால் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. புதுமையான கதைக்களத்துடன் களம் இறங்கும் இப்படத்தின் காட்சி அமைப்புகள் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இந்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, படம் வரும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்மஸ் பண்டிகை வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. திரையரங்குகளில் குடும்பத்துடன் ரசிக்கும்படி உருவாகியுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்