சூரியின் 'மண்டாடி' பட தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்
நடிகர் சூரி, சுஹாஸ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படமான 'மண்டாடி' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை முன்னணி திரைப்பட நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் முறைப்படி கைப்பற்றியுள்ளது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் இப்படத்தைப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மஹிமா நம்பியார் நாயகியாக நடித்துள்ளார். பீட்டர் ஹெய்ன் அமைத்துள்ள அனல் பறக்கும் சண்டை காட்சிகள் இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. செப்டம்பர் 10 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை தமிழகத்தின் மிகப்பெரிய திரையரங்குகளில் வெளியிட ரெட் ஜெயண்ட் மூவிஸ் திட்டமிட்டுள்ளது. சூரி நாயகனாக நடிக்கும் படங்கள் தொடர்ந்து வணிக ரீதியாக வெற்றி பெற்று வரும் நிலையில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
· Red Giant Movies