நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட பக்தி நகைச்சுவைத் திரைப்படமான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை முன்னணி நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கெசாண்ட்ரா, யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், சுந்தர் சியின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகும் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குடும்பங்கள் ரசித்து பார்க்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடாக வருகிற நவம்பர் 6-ஆம் தேதி இப்படம் தமிழ்நாடெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்