பிரபாஸின் சலார் படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்: டிசம்பர் 22-ல் அதிரடி ரிலீஸ்!
கே.ஜி.எஃப் படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட ஆக்ஷன் திரைப்படமான 'சலார்: சீஸ்பயர்' தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தமிழகமெங்கும் வழங்கவுள்ளதாக ரெட் ஜெயண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து பிரித்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரியா ரெட்டி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு புவன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைப்பயிற்சியில் அதிரடி காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் 22-ஆம் தேதி உலகம் முழுவதும் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள சலார், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் பிரம்மாண்டமாக திரையிடப்படவுள்ளது. பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு புதுவித திரையரங்க அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Red Giant Movies