லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் RX: ரெஜினா கசாண்ட்ரா இணையும் புதிய பட அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் RX: ரெஜினா கசாண்ட்ரா இணையும் புதிய பட அப்டேட்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் தனி முத்திரை பதித்து வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, தற்போது புதிய அதிரடி கூட்டணியில் இணைந்துள்ளார். பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் RX படத்தில் ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக எக்ஸ் தளத்தில் மூவி தமிழ் பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் ரெஜினா கசாண்ட்ராவுக்கு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட சுவாரசியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் பிரம்மாண்ட கூட்டணியும் ரெஜினாவின் இணைப்பும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் வழங்கும் தயாரிப்பு என்பதால் கதைக்களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என சினிமா ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். விரைவில் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு குறித்த விரிவான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்