கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணையும் இனிமேல்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணையும் இனிமேல்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இனிமேல் ஆல்பம் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மார்ச் 25 முதல் இந்த பாடல் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்பாடலுக்கு உலகநாயகன் கமல்ஹாசன் நேரடியாகப் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பிரபல நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசன் இதற்கு இசையமைத்திருப்பதுடன், முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து முதல்முறையாகத் திரையில் ஜோடியாக நடித்துள்ளார். கேஜிஎஃப் புகழ் புவன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த மியூசிக் வீடியோ நவீன கால காதல் உறவுகள் மற்றும் பிரிவுகளைப் பிரதிபலிக்கும் விதமாகப் புதுமையான கோணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மாஸ் இயக்குனராக அறியப்பட்ட லோகேஷ் கனகராஜ் நடிகராகக் களமிறங்கியதும், ஸ்ருதி ஹாசனுடன் அவர் தோன்றும் காதல் காட்சிகளும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் விவாதங்களையும் கொண்டாட்டங்களையும் ஏற்படுத்தி வைரலானது.

· Sgayathrie

பழைய செய்திகள்