புக்மைஷோவில் இமாலய சாதனை படைத்த ராக்கிங் ஸ்டார் யாஷ்: 8 நாட்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட் விற்பனை!

புக்மைஷோவில் இமாலய சாதனை படைத்த ராக்கிங் ஸ்டார் யாஷ்: 8 நாட்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட் விற்பனை!

கன்னட திரையுலகின் முன்னணி நாயகனான ராக்கிங் ஸ்டார் யாஷ், புக்மைஷோ தளத்தில் புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளதாக முன்னணி சினிமா போர்ட்டலான ஒன்லி கோலிவுட் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. யாஷ் நடித்த 'கே.ஜி.எஃப் 2' இரண்டு நாட்களும், அவர் நடித்துள்ள பிரம்மாண்ட 'ராமாயணா' திரைப்படம் ஆறு நாட்களும் என மொத்தம் எட்டு நாட்கள் புக்மைஷோவில் ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இந்தியத் திரையுலகில் எந்த ஒரு முன்னணி நட்சத்திரமும் எட்டாத இந்த இமாலய சாதனையை யாஷ் தொட்டுள்ளார். அவரது படங்களுக்கான டிக்கெட் முன்பதிவு வேகம் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளது. பான்-இந்தியா அளவில் தனது அதிரடி ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வரும் யாஷ், வரவிருக்கும் திரைப்படங்கள் மூலமாக இந்திய பாக்ஸ் ஆபீஸில் மேலும் பல புதிய உச்சங்களைத் தொடுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனால் அவரது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

· Only Kollywood

பழைய செய்திகள்