10 ஆண்டுகளில் வெறும் 3 படங்கள்: ₹3000 கோடி வசூல் சாதனையை நோக்கி ராக்கிங் ஸ்டார் யாஷ்!
கன்னட திரையுலகில் தொடங்கி இன்று இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள ராக்கிங் ஸ்டார் யாஷ், கடந்த பத்து ஆண்டுகளில் வெறும் மூன்று படங்களில் மட்டுமே நடித்து உலகளவில் 3000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பாக்ஸ் ஆபீஸ் சாதனையை நிகழ்த்தி வருவதாக சினிமா வட்டாரங்களில் ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து 'ஒன்லி கோலிவுட்' தளம் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்புப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் இந்திய அளவில் வசூல் சாதனைகளை சுக்குநூறாக உடைத்தன. இரண்டாம் பாகம் மட்டுமே உலகளவில் 1200 கோடி ரூபாய்க்கு மேல் குவித்து இந்திய சினிமாவின் அசைக்க முடியாத வசூல் நாயகனாக யாஷை மாற்றியது. தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட 'ராமாயணம்' படத்தில் ராவணன் கதாபாத்திரத்திலும், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்ஸிக்' படத்திலும் யாஷ் நடித்து வருவது பான் இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்தடுத்து வெளியாகவுள்ள இந்த பிரம்மாண்ட படங்கள் திரையரங்குகளில் வரும்போது பாக்ஸ் ஆபீஸ் புதிய உச்சங்களை தொடும் என்பதில் சந்தேகமில்லை. மிகக் குறைந்த படங்களில் நடித்து இவ்வளவு பெரிய பாக்ஸ் ஆபீஸ் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய யாஷின் திரைப் பயணம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
· Only Kollywood