பத்து தலைகளுடன் ஆக்ரோஷ ராவணனாக ராக்கிங் ஸ்டார் யாஷ்: இணையத்தை மிரட்டும் 'ராமாயணம்' புதிய தோற்றம்!

பத்து தலைகளுடன் ஆக்ரோஷ ராவணனாக ராக்கிங் ஸ்டார் யாஷ்: இணையத்தை மிரட்டும் 'ராமாயணம்' புதிய தோற்றம்!

கேஜிஎஃப் மூலம் உலகளவில் புகழ்பெற்ற ராக்கிங் ஸ்டார் யாஷ், 'ராமாயணம்' திரைப்படத்தில் ராவணனாக நடித்துள்ள மிரட்டலான அவதாரக் காட்சிகள் அடங்கிய சிறப்பு வீடியோ வெளியாகி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பத்து தலைகள், பத்து வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட அசுர பலம் பொருந்திய ராவணனாக யாஷ் தனது மிரட்டலான உடல்மொழியையும் தீர்க்கமான பார்வையையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஆக்ரோஷமான நடிப்பு காட்சிகளிலேயே அனல் பறக்கச் செய்து கதாபாத்திரத்திற்கு கம்பீரமான தோற்றத்தை அளித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பின்னணி இசையும் இந்த காட்சிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பைச் சேர்த்துள்ளது. திரையில் ராவணனின் தோற்றம் பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இன்னும் சில தினங்களில், அதாவது வரும் நவம்பர் 5 ஆம் தேதி 'ராமாயணம்' திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் திரைக்கு வருகிறது. யாஷின் இந்த அசுரத்தனமான ராவணன் பாத்திரத்தைக் காண ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட் எடுத்து ஆவலுடன் காத்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்