நடிகராக களமிறங்கும் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்: 'எல்லம்மா' வெளியீட்டு தேதி அறிவிப்பு!
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், கதாநாயகனாக களமிறங்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'எல்லம்மா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 'பார்ஷி' என்ற மண் சார்ந்த அழுத்தமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார். 'பலாகம்' திரைப்படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த வேணு எல்தண்டி இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இதுவரை தனது அதிரடி இசையால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த தேவி ஸ்ரீ பிரசாத், முதன்முறையாக கதையின் நாயகனாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த உள்ளார் என்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'எல்லம்மா', 2027 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
· Actor Kayal Devaraj