ரோஷன் கனகலா நடிக்கும் ஃபார் லவ் ஃப்ரம் தி ஸ்டார்ஸ்: தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு

ரோஷன் கனகலா நடிக்கும் ஃபார் லவ் ஃப்ரம் தி ஸ்டார்ஸ்: தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு

இளம் நடிகர் ரோஷன் கனகலா நடிப்பில் உருவாகும் மூன்றாவது படத்திற்கு 'ஃபார் லவ் ஃப்ரம் தி ஸ்டார்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காதல் ததும்பும் வண்ணமயமான சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். வி.ஐ. ஆனந்த் கதையமைப்பில், விஜய் கே. காமிசெட்டி எழுதி இயக்கும் இப்படத்தில் ரோஷன் கனகலாவுடன் காஹாஸி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யா அக்கலா, சுதர்ஷன், ரவிதேஜா கிரிஜாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் கைகோர்த்துள்ளனர். காதலும் கற்பனையும் இணைந்த விண்வெளிப் பின்னணியிலான புதுமையான கதையாக இது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த டீசர் மற்றும் இசை வெளியீட்டுத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்