ரோஷன் மேகா நடிக்கும் புதிய பான்-இந்தியா சூப்பர் ஹீரோ படம்: அசோகா கிரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரோஷன் மேகா நடிக்கும் புதிய பான்-இந்தியா சூப்பர் ஹீரோ படம்: அசோகா கிரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குநர் மோகனகிருஷ்ணா இந்திரகண்டி இயக்கத்தில் ரோஷன் மேகா சூப்பர் ஹீரோவாக நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படத்தை அசோகா கிரியேஷன்ஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அசோகா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இந்தப் பிரம்மாண்ட படத்தில், பிரபல நடிகர் வினய் ராய் மற்றும் ரேகா பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் கௌரஹரி இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்திய சினிமா ரசிகர்கள் வியக்கும் வகையில் சர்வதேச தரத்திலான சிஜிஐ மற்றும் பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளுடன் ஒரு புதுமையான சூப்பர் ஹீரோ கதையை உருவாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த சூப்பர் ஹீரோ படத்தின் முழுவீச்சிலான படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட முக்கிய இந்திய மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் பான்-இந்தியா அளவில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்