புதிய சூப்பர் ஹீரோவாக ரோஷன் மேகா: மோகனகிருஷ்ணா இந்திரகண்டியின் பான் இந்தியா பிரம்மாண்ட படம்
தெலுங்கு திரையுலகின் இளம் திறமைசாலியான ரோஷன் மேகா, அடுத்ததாக ஒரு புதிய சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். முன்னணி இயக்குநர் மோகனகிருஷ்ணா இந்திரகண்டி இயக்கும் இந்த பிரம்மாண்ட பான் இந்தியா கனவுத் திட்டம் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசோகா கிரியேஷன்ஸ் சார்பில் முப்பா அசோக் மற்றும் சுனில் பலுசு ஆகியோர் இணைந்து இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் முழுவீச்சில் துவங்கவுள்ளன. வித்தியாசமான கற்பனை உலகமும் பிரமிக்க வைக்கும் நவீன ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்த ஒரு சூப்பர் ஹீரோவாக ரோஷன் மேகா களம் இறங்குவது, தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
· Ursvamsishekar