நண்பர்கள் தின ஸ்பெஷல்: இணையத்தில் வெளியானது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நட்பு' மியூசிக் வீடியோ!
நண்பர்கள் தினக் கொண்டாட்டமாக, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் 'தோஸ்தி' (தமிழில் 'நட்பு') சிறப்பு மியூசிக் வீடியோ அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியாகியுள்ளது. ராமராஜுவாக வரும் ராம்சரண் மற்றும் பீமாக வரும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருபெரும் சக்திகள் நட்பால் இணையும் தருணத்தை எம்.எம். கீரவாணியின் கம்பீரமான இசை படம் பிடித்துக் காட்டுகிறது. இப்பாடலின் தமிழ் பதிப்பை அனிருத் ரவிச்சந்தரும், மலையாளத்தில் விஜய் யேசுதாஸும், இந்தியில் அமித் திரிவேதியும் பாடியுள்ளனர். ஐந்து மொழிகளைச் சேர்ந்த முன்னணி பாடகர்கள் ஒன்றாகத் தோன்றும் இந்த மியூசிக் வீடியோ, வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
· Penmovies