ஓடிடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ஆர்ஆர்ஆர், கங்குபாய் படங்கள் தியேட்டரில்தான் ரிலீஸ் என பென் ஸ்டுடியோஸ் உறுதி!

ஓடிடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ஆர்ஆர்ஆர், கங்குபாய் படங்கள் தியேட்டரில்தான் ரிலீஸ் என பென் ஸ்டுடியோஸ் உறுதி!

'கங்குபாய் கத்தியவாடி', 'ஆர்ஆர்ஆர்' மற்றும் ஜான் ஆபிரகாமின் 'அட்டாக்' ஆகிய திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இத்திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என பென் ஸ்டுடியோஸ் தலைவர் டாக்டர் ஜெயந்திலால் கடா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொரோனா சூழலால் பெரிய படங்கள் ஓடிடியில் விற்பனை செய்யப்படுவதாக இணையத்தில் பல ஊகங்கள் எழுந்தன. ஆனால் இந்த மூன்று பிரம்மாண்ட திரைப்படங்களும் பெரிய திரையில் ரசிகர்களுக்கு காட்சி விருந்தளிக்கவே படமாக்கப்பட்டுள்ளதாகவும், திரையரங்க வெளியீட்டில் எந்த சமரசமும் இல்லை என்றும் பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பெரிய நடிகர்களின் ரசிகர்களுக்கும் பெரும் நிம்மதியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

· Jayantilalgada

பழைய செய்திகள்