ரசிகர்களை உருக வைத்த 'கொமுரம் பீமுடோ' முழு வீடியோ பாடல்: வெளியீட்டு நேரத்தை அறிவித்த படக்குழு!

ரசிகர்களை உருக வைத்த 'கொமுரம் பீமுடோ' முழு வீடியோ பாடல்: வெளியீட்டு நேரத்தை அறிவித்த படக்குழு!

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியாகி உலக அளவில் வசூல் மழை பொழிந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மிகவும் உருக்கமான 'கொமுரம் பீமுடோ' முழு வீடியோ பாடல் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் வட இந்திய விநியோக உரிமையைப் பெற்ற பென் மூவிஸ் நிறுவனம், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ஏற்று நடித்த கொமுரம் பீம் கதாபாத்திரத்தின் உணர்ச்சிமிக்க உச்சக்கட்டக் காட்சியில் இந்தப் பாடல் இடம்பெற்றது. கால பைரவா பாடிய இந்த ஆத்மார்த்தமான மெலடிப் பாடலுக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த இந்தக் காட்சி, படத்திற்கே மிகப்பெரிய பலமாக அமைந்தது. ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்குப் பிறகு, 'கொமுரம் பீமுடோ' முழு வீடியோ பாடல் நாளை மாலை 4 மணிக்கு லஹரி மியூசிக் மற்றும் டி-சீரிஸ் யூடியூப் தளங்களில் வெளியாகிறது. ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரின் நடிப்பும் திரையில் காட்டிய பிரம்மாண்டமும் இணையத்தில் மீண்டும் ஒருமுறை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

· Penmovies

பழைய செய்திகள்