'ஆர்ஆர்ஆர்' டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் அறிவிப்பு: நெட்பிளிக்ஸ், விஜய் டிவி வசம்!

'ஆர்ஆர்ஆர்' டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் அறிவிப்பு: நெட்பிளிக்ஸ், விஜய் டிவி வசம்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி கூட்டாளிகளை தயாரிப்பு நிறுவனமும் பென் மூவீஸும் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இப்படத்தின் சர்வதேச மற்றும் இந்தி டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட டிஜிட்டல் உரிமைகளை ஜீ5 நிறுவனமும் பெற்றுள்ளன. தொலைக்காட்சி உரிமங்களைப் பொறுத்தவரை, தமிழில் விஜய் தொலைக்காட்சியும், தெலுங்கில் ஸ்டார் மா நிறுவனமும், இந்தியில் ஜீ சினிமா தொலைக்காட்சியும் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ளன. பான்-இந்தியா அளவில் உருவாகும் இப்பிரம்மாண்டப் படைப்பின் ஒளிபரப்பு உரிமைகள் சாதனைக் கட்டணங்களுக்கு ஒப்பந்தமாகி இருப்பது, இந்தியத் திரைத்துறை வரலாற்றில் புதிய உச்சமாகப் பார்க்கப்படுகிறது.

· Penmovies

பழைய செய்திகள்