'ஆர்ஆர்ஆர்' படத்தின் ரிலீஸ் தேதி உறுதி: மார்ச் 25 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்ட வெளியீடு!
கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தொடர் தாமதங்களுக்குப் பிறகு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வரும் மார்ச் 25 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். டிவிவி தனய்யா தயாரிப்பில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக ஆவலுடன் காத்திருந்தனர். அனைத்துக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இத்திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் பிரம்மாண்ட திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை வட இந்தியாவில் பென் ஸ்டுடியோஸ் வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள சினிமா பிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
· Penmovies