ரசிகர்களை ஆட வைக்கும் 'நாச்சோ நாச்சோ' வீடியோ பாடல்: இன்று மாலை 4 மணிக்கு ரிலீஸ்!

ரசிகர்களை ஆட வைக்கும் 'நாச்சோ நாச்சோ' வீடியோ பாடல்: இன்று மாலை 4 மணிக்கு ரிலீஸ்!

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்று உலகளவில் ட்ரெண்டான 'நாச்சோ நாச்சோ' (தமிழில் 'நாட்டு கூத்து') முழு வீடியோ பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக பென் மூவீஸ் அறிவித்துள்ளது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து ஆடிய இந்த அதிவேக நடனம், திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்து ஆட வைத்தது. எம்.எம். கீரவாணியின் துள்ளலான இசைக்கு பிரேம் ரக்‌ஷித் அமைத்த நடனம் உலக சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த தசாப்தத்தின் மிகச்சிறந்த நடனப் பாடலாகக் கொண்டாடப்படும் இப்பாடலின் வீடியோ வெளியீடு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

· Penmovies

பழைய செய்திகள்