உலகளவில் ஜனவரி 7-ல் வெளியாகும் 'ஆர்ஆர்ஆர்': அதிகாரப்பூர்வமாக அறிவித்த பென் ஸ்டுடியோஸ்!
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட படைப்பான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வரும் 2022 ஜனவரி 7 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என பென் ஸ்டுடியோஸ் தலைவர் டாக்டர் ஜெயந்திலால் கடா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வட இந்திய வெளியீட்டு உரிமையை பென் ஸ்டுடியோஸ் பெற்றுள்ளது. அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்முருதி வெங்கட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கற்பனைக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. சங்கராந்தி பண்டிகைக் கொண்டாட்டமாக திரைக்கு வரவிருக்கும் இந்த பிரம்மாண்ட படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர நிகழ்வுகள் அடுத்தடுத்து தொடங்கவுள்ளன. இதனால் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகமும் ஜனவரி 7-ஐ ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
· Jayantilalgada