ஆகாயத்தில் ஒரு தாரகை: 'பிஜிலி' கதாபாத்திரத்தில் ருஹானி சர்மாவின் வசீகர ஃபர்ஸ்ட் லுக்!

ஆகாயத்தில் ஒரு தாரகை: 'பிஜிலி' கதாபாத்திரத்தில் ருஹானி சர்மாவின் வசீகர ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் நடிக்கும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT) திரைப்படத்திலிருந்து நடிகை ருஹானி சர்மாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் 'பிஜிலி' என்ற சுவாரசியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெளியாகியுள்ள போஸ்டரில் ருஹானி சர்மாவின் வசீகரமான தோற்றமும், கதாபாத்திரத்திற்கான தனித்துவமான பாணியும் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரொமான்டிக் டிராமாவாக தயாராகி வரும் இப்படத்தில் இந்த பிஜிலி கதாபாத்திரம் கதையின் முக்கிய திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது. இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்