ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் ருக்மிணி வசந்த்: 'தாரா' கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம்!

ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் ருக்மிணி வசந்த்: 'தாரா' கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம்!

'கணம்' திரைப்படத்தை இயக்கி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்கின் அடுத்த புதிய திரைப்படத்தில் முன்னணி கதாநாயகி ருக்மிணி வசந்த் இணைந்துள்ளார். இந்த உற்சாகமான செய்தியை படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒரு சுவாரசியமான ரோட் ட்ரிப் (Road Trip) கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில் 'தாரா' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் நடிக்கிறார். 'சப்த சாகரதாச்சே எல்லோ' படங்களின் மூலம் தென்னிந்திய அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ருக்மிணி வசந்த் இணைந்திருப்பது, இந்த கதையின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. அவருடன் இணைந்து நடிக்கும் மற்ற நண்பர்கள் குழுவும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த பயணத் திரைப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக் கவரும் வகையில் புத்துணர்ச்சியூட்டும் கதையமைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

· Prosathish

பழைய செய்திகள்