எம்.ஜி.ஆருடன் 88 படங்களில் நடித்து மிரட்டிய கம்பீர நடிகர்: எஸ்.ஏ.அசோகனின் 44-வது நினைவு நாள்!

எம்.ஜி.ஆருடன் 88 படங்களில் நடித்து மிரட்டிய கம்பீர நடிகர்: எஸ்.ஏ.அசோகனின் 44-வது நினைவு நாள்!

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என அனைத்து வேடங்களிலும் தனது கம்பீரமான குரலாலும் நடிப்பாலும் முத்திரை பதித்த பழம்பெரும் நடிகர் எஸ்.ஏ.அசோகன் அவர்களின் 44-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரது நினைவுகளையும் திரையுலக சாதனைகளையும் பழைய சினிமா ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். திருச்சி புனித வளனார் (செயிண்ட் ஜோசப்) கல்லூரியில் படித்து பி.ஏ பட்டம் பெற்ற அசோகன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 திரைப்படங்களில் இணைந்து நடித்து சரித்திரம் படைத்தவர். 'உலகம் சுற்றும் வாலிபன்', 'அடிமைப் பெண்', 'காவல்காரன்', 'ரிக்‌ஷாக்காரன்' உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கு சவால் விடும் வில்லனாக தோன்றி இவர் வெளிப்படுத்திய நடிப்பு இன்றும் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. கண்களாலேயே மிரட்டும் பாவனை, கம்பீரமான உடலமைப்பு மற்றும் தனித்துவமான வசன உச்சரிப்பு மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் எஸ்.ஏ.அசோகன். அவரது மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவர் விட்டுச் சென்ற திரைக் கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் நினைவுகளில் என்றும் அழியாமல் வாழ்கின்றன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்