சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 27’ படத்தில் இணையும் சாய் அபயங்கர்: கோலிவுட்டில் புதிய இசை கூட்டணி!

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 27’ படத்தில் இணையும் சாய் அபயங்கர்: கோலிவுட்டில் புதிய இசை கூட்டணி!

இளம் தலைமுறை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட இசையமைப்பாளர் சாய் அபயங்கர், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘எஸ்கே 27’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக இணையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இத்தகவலை ஒன்லி கோலிவுட் தளம் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற சுயாதீன பாடல்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்த சாய் அபயங்கர், தற்போது முன்னணி தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். எனர்ஜியான நடிப்புக்கு பெயர் பெற்ற சிவகார்த்திகேயனுடன், யூத் ரசிகர்களின் நாடிபிடித்த சாய் அபயங்கர் இணைந்திருப்பது திரையுலகில் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இயக்கும் இயக்குநர் யார் என்ற விவரங்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களுக்கு எப்போதும் இருக்கும் இசை எதிர்பார்ப்பை இந்த புத்தம் புதிய காம்போ இரட்டிப்பாக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

· Only Kollywood

பழைய செய்திகள்