வேட்டையனாக மாறும் சாய் தரம் தேஜ்: 'சம்பராலா ஏட்டி கட்டு' படத்தின் மாஸ் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான சாய் தரம் தேஜின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 'சம்பராலா ஏட்டி கட்டு' திரைப்படத்தின் புதிய அதிரடி போஸ்டர் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 'பலி' என்ற ஆக்ஷன் அவதாரத்தில் மிரட்டலான தோற்றத்தில் அவர் காட்சி தருவது சினிமா ரசிகர்களைப் பரவசப்படுத்தியுள்ளது. ரோஹித் கே.பி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. சாய் தரம் தேஜின் ஆக்ஷன் காட்சிகள் இதில் மிகத் தீவிரமாகவும் புதுமையாகவும் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திரைப்படம் வரும் 2027 சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பண்டிகைக் காலத்தில் வெளியாகும் இப்படத்திற்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
· Actor Kayal Devaraj