160 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு: சாய் தரம் தேஜின் பிரம்மாண்ட படம் சம்பரால ஏடி கட்டு ஷூட் ஓவர்!
மெகா சுப்ரீம் ஹீரோ சாய் தரம் தேஜ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் 'சம்பரால ஏடி கட்டு' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 10 பிரம்மாண்டமான கட்டங்களாக 160 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முழுப் படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்த தகவலை நடிகர் காயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ரோஹித் கே.பி இயக்கத்தில் உருவாகும் இந்த ஆக்ஷன் படத்தில், நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். கன்னட திரையுலகின் முன்னணி வில்லன் நடிகர் தனஞ்சயா முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். காந்தாரா பட புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கும் இப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிக பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக்கி வருகிறது. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி சங்கராந்தி பண்டிகை விருந்தாக இப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் அப்டேட்டுகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
· Actor Kayal Devaraj