'ராமாயணா' படத்தில் மிதிலை இளவரசி சீதையாக சாய் பல்லவி: நெகிழ்ச்சியூட்டும் புதிய ப்ரோமோ வெளியீடு!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தில் மிதிலையின் புதல்வி சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் சிறப்புக் காட்சிகளைக் கொண்ட புதிய ப்ரோமோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அன்பும் தர்மமும் நிறைந்த சீதையின் கம்பீரத்தையும் பக்தியையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய தோற்றத்தில் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடிக்கும் இந்த வரலாற்றுப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வரும் நவம்பர் 5 அன்று அனைத்து பிரீமியம் திரைகளிலும் 'ராமாயணா' வெளியாகிறது. சாய் பல்லவியின் இந்த புதிய ப்ரோமோ வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
· Only Kollywood