'ஓம்' படத்தில் வனத்துறை அதிகாரியாக சாய் பல்லவி: ஆக்ஷன் தெறிக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!
நடிகை சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படத்தின் அதிரடியான கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் 'நித்யா ரெட்டி' என்ற வனத்துறை போலீஸ் அதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட புதிய தோற்றத்தில் சாய் பல்லவி தோன்றியுள்ளார். சமீபத்தில் அமரன் படத்தில் எமோஷனலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, இப்படத்தில் துணிச்சலான சண்டை காட்சிகளில் துப்பாக்கியுடன் களமிறங்கி அசத்தியுள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். கிளிம்ப்ஸ் வீடியோவில் ஒலிக்கும் இசை காட்சிகளின் வேகத்தை கூட்டி ரசிகர்களை ஈர்க்கிறது. முழுமையான ஆக்ஷன் மற்றும் கமர்சியல் திரைப்படமாக தயாராகியுள்ள 'ஓம்', வரும் நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் சாய் பல்லவியின் கம்பீரமான காவல் அதிகாரி வேடம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய திரை அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· @_movietamil