காவல்துறை அதிகாரியாக சாய் பல்லவி: 'ஓம்' படத்தின் நித்யா ரெட்டி கிளிம்ப்ஸ் இன்று மாலை ரிலீஸ்!
தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் 'ஓம்' திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ள 'நித்யா ரெட்டி' கதாபாத்திரத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. மம்மூட்டி, நசீருதீன் ஷா, ஸ்ரீலீலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரப் பட்டாளம் நடிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி சிறப்புப் பணி காவல் அதிகாரியாக அதிரடி வேடத்தில் தோன்றுகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளதுடன், சாய் பல்லவியின் ஆக்ஷன் தோற்றம் சினிமா ரசிகர்களிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. வன்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 'ஓம்' திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
· Actor Kayal Devaraj