சத்யவான் சாவித்திரி படத்தின் சக்கரைப் பெண்ணே பாடல் க்ளிம்ப்ஸ் வெளியீடு: முழுப் பாடல் நாளை ரிலீஸ்!

சத்யவான் சாவித்திரி படத்தின் சக்கரைப் பெண்ணே பாடல் க்ளிம்ப்ஸ் வெளியீடு: முழுப் பாடல் நாளை ரிலீஸ்!

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சத்யவான் சாவித்திரி திரைப்படத்தின் ரொமான்டிக் மெலடி பாடலான 'சக்கரைப் பெண்ணே' பாடலின் சுவாரசியமான க்ளிம்ப்ஸ் வீடியோவை தயாரிப்புத் தரப்பு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த இனிமையான பாடலின் முழுப் பதிவு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீன் எஸ் விஜய் வரிகளில் தீப்தி பாடியுள்ள இந்த பாடல், ரசிகர்களைக் கவரும் வகையில் இனிமையான மெட்டமைப்போடு அமைந்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளிவந்துள்ள பாடல் முன்னோட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சத்யவான் சாவித்திரி திரைப்படம் வரும் நவம்பர் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. வித்தியாசமான கதையம்சத்தோடு தயாராகியுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்