கீர்த்தி சுரேஷின் 'சத்யவான் சாவித்திரி': 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து 'சக்கரை பெண்ணே' பாடல் சாதனை!
கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள 'சத்யவான் சாவித்திரி' திரைப்படத்திலிருந்து வெளியான மெலடி பாடலான 'சக்கரை பெண்ணே', யூடியூபில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து இசை பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இனிமையான இந்த பாடல் தொடர்ந்து ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்து சாதனை படைத்து வரும் தகவலை சினிமா பத்திரிகையாளர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் தயாரிப்பில் சாருகேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பிரவீன் எஸ். விஜய் வரிகள் எழுதியுள்ளார். தீப்தியின் வசீகர குரலில் ஒலிக்கும் இந்த மெலடி பாடல் இணையத்தில் பலராலும் ரீல்ஸ்களாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இயக்குநர் மிஷ்கின், பாலா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'சத்யவான் சாவித்திரி' திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் அடுத்தகட்ட புரோமோஷன் நிகழ்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj